நாம் பெரும்பாலும் கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமலோ கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, ஒரு ஓவியனின் நுட்பத்தோடு பார்ப்பதற்கான கல்வியை அளிப்பவர் கல்யாண்ஜி.
தமிழ் மரபின் பெரும் விளைவை, தனது சிறுவெளியீடுகளில் சுமக்கும் ‘நவீன’ கவிஞன் விக்ரமாதித்யன். தமிழின் அழகுகள் அத்தனையையும் சூடிய கவிதைகள் விக்ரமாதித்யனுடையது.
என் உலகத்தை, என் அடக்கப்பட்டிருந்த வன் உணர்வை அங்கீகரித்து, அதையும் கவிதை ஏற்கும் என்பதை சொன்னவர் கலாப்ரியா். அதனால், அவர் என்றும் எனக்குள் நிலைத்த நாயகன்.
ஒன்றை, அதன் உள்ளுக்குள்ளே அதன் சதையோடு எலும்புக் கூடுகளையும் பார்த்துவிடும் கூர்ந்த கண்கள் மணிவண்ணனுடையவை.