திரைப்படங்களில் ‘ரீல்ஸ்’ கலாச்சாரத்தின் தாக்கத்தால் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக இருந்தாலே போதும் என்னும் தொனியிலையே உருவாக்கப்படுகின்றன.
எம் பெண்களின் / இன்பக் கதைகளானது / இத்தனை விரைவாக / முடிவது எதனால் / தயக்கத்துடன் வருகிறது / ஒற்றை வார்த்தையில் / ஒரு பதில்
தமிழ் தவிர மற்ற மொழிகளில் வெளியான க.நா.சு. படைப்புகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை. அந்த படைப்புகளை கவனப்படுத்தும் முயற்சியே இக்கட்டுரை.
‘உபமன்யு பக்த விலாஸம்’ ‘பெரிய புராணத்’ துக்கு முந்தி என்றால் குலோத்துங்கனைப் பற்றிய குறிப்பு அதில் எப்படி இருந்திருக்க முடியும்?
முரகாமியின் படைப்புக்களில் ஈர்ப்புள்ளவர்களை மட்டுமில்லை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள எவரையும் இந்த நூலை வாசிக்கப் பரிந்துரை செய்வேன்.
ஏழு வருடங்களானாலும் முன்வைத்தக் காலை பின்வைக்காமல் முன்னோக்கிச் சென்றோம். பல சொந்தக் காரியங்களை நாங்கள் தவிர்க்க வேண்டியிருந்தது. பல விஷயங்களை விட்டுக் கொடுத்தோம்.
வழக்கமான வேகமும் அழுத்தமும் இல்லாததை உணர்ந்த அவள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெல்லத் தலையைத் துவட்டினாள். எப்படி இதுபோல நடந்தது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மொழிப் பிரச்சினை என்பது வெறும் அடையாளப் பிரச்சினை அல்ல; அது வெறுமனே ஒரு மொழிசார்ந்த பிரச்சினையும்கூட அல்ல. அது அதிகாரப் பிரச்சினை.
அலட்சியத்தினாலோ துருப்பிடித்தோ உதாசீனத்தினாலோ இகழ்ந்தோ அரசாணையினாலோ ஒரு மொழி இறக்கும் போது, மொழியின் பயனாளர்களும் மொழியை உருவாக்குபவர்களும் அந்தச் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்
தூக்கத்திலிருந்து சட்டென்று திடுக்கிட்டு எழுந்த கவர்னர் ஸ்விட்சைப் போட்டான். வெளிச்சத்தில் அறையைப் பார்த்தான். அது எப்போதும்போல் இருந்தது.