Tags : ஹாருகி முராகமி

ஒரு பூனையை தொலைத்தல்: என் தந்தையின் நினைவுகள்

அந்த அனுபவம் தீர்க்கமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தது: கீழே இறங்குவதென்பது மேலே போவதை விடக் கடினமானது. இதிலிருந்து பொதுமைப்படுத்தினால், விளைவுகள் காரணங்களை மிஞ்சக்கூடியவை; அத்துடன் மட்டுப்படுத்துவதும்கூட. இந்த முறைப்பாட்டின்படி சில சந்தர்ப்பங்களில் ஒரு பூனை கொல்லப்படுகிறது; பிற சந்தர்ப்பங்களில் ஒரு மனித உயிர்.