கதாபாத்திரங்களின் வலிகளையும் உணர்வுகளையும் நமக்குள் கடத்தி நம்மைத் தத்தளிக்க வைக்கும் எழுத்து இமையத்திற்கு வரமாகக் கிடைத்திருக்கிறது.
ஷேக்ஸ்பியர் நடைமுறைகளைச் சித்திரித்தானே தவிர, யாரையும் பற்றித் தீர்ப்பு வழங்கவில்லை. அவனது மாந்தர்கள், அவர்கள் பண்புக்கேற்ப பேசுகிறார்கள்.
படைப்புக்கு உள்ளும் வெளியிலும் இமையம் என்பது கறுப்பு-சிவப்பு கரைவேட்டி கட்டி நடமாடும் விமர்சனம்தான்.
எந்த இடத்திலும் தன் குரலாக எதையும் ஒலிக்கச் செய்யாமல் பாத்திரங்களை இயல்பாகப் பேசவிட்டே எழுதும் பாணி இமையம் உடையது.