சாரா கேனின் முதல் நாடகம் முதல்முறையாக அரங்கேறிய போது இடையறாத வன்முறைக் காட்சிகள் பார்வையாளர்களிடம் மிகுந்த கொந்தளிப்பை எழுப்பியது.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு ஏற்பியல் உள்ளது. பெரிய பத்திரிகைகளின் ஏற்பியல் ஒத்து வராததால் சிறுபத்திரிகைகள் வந்தன.
எனது வாழ்வின் மகிழ்ச்சியான மூன்று யாத்திரைகளின் போதும் வாழ்வு விதித்துவிட்ட பெரும் அயர்ச்சியில் இருந்து மீண்டுகொள்ளவே நடக்க ஆரம்பித்தேன்.
இது மனிதன் வாழ்ந்த உலகின் தொன்மையான இடங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்ல மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
‘10 டவுனிங் தெரு’ எப்படி வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதோ, அந்தளவுக்கு தமிழ் படைப்புலகத்தில் பெருமிதம் கலந்த விலாசம், ‘21இ சுடலை மாடன் கோவில் தெரு’.
“எப்படி மனிதா உன் காமத்தை ஒளித்து வைக்கிறே... மனிதனுக்கு இயல்பாய் இருக்கிற காமத்தை ஒளித்து வைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கு...”
ஆண் - பெண் உறவுகளின் சிக்கல்களினால் ஏற்படும் பிரச்சினைகளை சித்தரிக்கும் ‘கடற்காட்சி’ (1975) ஆல்பிக்கு 2வது புலிட்சர் விருதை வாங்கித் தந்தது.
சங்க காலப் புலவர்களுக்கிருந்த நகைச்சுவை உணர்வு இலக்கண ஆசிரியர்களுக்கும் அவற்றுக்கு உரை கண்ட உரையாசிரியர்களுக்கும் இல்லை.
உலகத் தமிழ் இலக்கியமாக விரிவுபெற்று வரும் சூழலில் கோ.புண்ணியவானின் ‘கையறு’, ஆசி. கந்தராஜாவின் ‘ஒரு அகதியின் பேர்ளின் வாசல்’ இரண்டும் முக்கியமாக இருக்கின்றன.
இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலத்தையும் மத்திய ஆட்சிமொழி ஆக்கும் வாய்ப்பினை சீர்துக்கிப் பார்த்தல் நன்று.
