ஓவியம்: ரேவதி நந்தனா 1. கல் வெட்டாங் குழி வெயில் மின்ன பாசி படர்ந்து மாணிக்க படிகமாய் ஓர் கல் வெட்டாங் குழி. ஒரு காலத்தில் துவைக்க குளிக்கவென ஊருக்கு அது ஒரு வரம். மஞ்சள் புடவையில் அவள் விழுந்து மிதந்த இரவுக்கு பிறகு யாதம் புழங்காமல் கருநீலம் படியவாயிற்று இப்போது. பாறை இடுக்கில் முளைத்த மஞ்சணத்தி மர கிளையொன்று அந்தக் குழியில் தாழ, பாறைக்கும் கிளைக்கும் இடையே நீர் மேல் வலை பின்னி காத்திருக்கிறது ஒரு […]