சிறுகதைக்கென்று நோபல் பரிசு பெற்ற படைப்பாளி ஆலிஸ் மன்றோ ஒருவர் மட்டுமே. ஆலிஸின் எழுத்துக்கள் செக்காவுடன் ஒப்பிடப்பட்டுப் பாராட்டைப் பெற்றது.
Tags : எழுத்தாளர்களின் மறுபக்கம்
நபக்கோவ், அவரது இளம் பிராயத்திலிருந்தே வண்ணத்துப் பூச்சிகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். சுமார் நாலாயிரம் வகையான வண்ணத்துப் பூச்சிகளை அவர் சேகரித்து வைத்திருந்தார்.
டோரிஸ் லெஸ்ஸிங் உலக மகா யுத்தத்துக்குப் பிந்திய கட்ட எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இருபதாம் நூற்றாண்டின் பிரச்சினைகளைக் கவனித்து அவரது எழுத்து கட்டமைக்கப்பட்டது. அவரது ஆரம்ப கால நாவல்கள் சமூகத்தில் ஆழப் பதிந்திருந்த நிறவெறி அரசியலுக்கு எதிராக எழுந்தவை.
சில்வியாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘கொலாசஸ்’ 1960இல் வெளிவந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் சில்வியாவிடம் இருந்த விரக்தியையும் வெறுப்பு மனப்பாங்கையும் வன்முறை உணர்ச்சிகளையும் மரணத்தைக் கொண்டாடும் மனநிலையையும் எதிரொலித்தன.