ஒருநாள் போர்க்களத்தில் செத்துப் போயிருந்த சிங்கள இராணுவப் படைச் சிப்பாயினது உயிரற்ற உடலை நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிப்பாயின் முகம் எனது உடன்பிறவா சகோதரனொருவனை நினைவுபடுத்தியது. அவனும் நானும் சிறுவயதில் ஒன்றாக விளையாடப் பழகியிருந்தோம்.