நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள் / ஆனால் ஒருபொழுதும் / எழுதிவிடாதீர்கள் / அரிவாளால் வெட்டுண்டு / ஈ மொய்த்தபடி / வாய்பிளந்து கிடக்கும் / சாதியற்றவனின் மரணத்தை
போரின் முள்ளில் ஆடியது நம்முடைய ஊஞ்சல் பொறிகளின் மேல் கனவுகளைப் பயிரிட்டோம் நமது சிலந்தி பின்னிய வலையில் நாமே பூச்சிகளாகினோம்.
ஆபத்தானது கவிஞர்களின் சேர்க்கை வாளையொத்த உடைந்த கண்ணாடிக் கூர்மையுள்ள தனிமையுடனும் மழைத்துளியை விட லேசான கருணையுடனும் அதிகமும் தொடர்பு வைத்திருக்கிறார்கள்
தாக்கப்படும் எங்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும் ஒரு சிந்தனையுண்டு / நாங்கள் பஞ்சத்தை வென்று எங்களின் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம்
சில வினாடி பார்த்துக்கொண்டேயிருந்தேன் பாருங்கள் இதற்கெல்லாம் ஐம்பத்தி ஏழு வயசாக வேண்டியிருக்கிறது.
நானும் மகனும் அடித்துத் துரத்தி விளையாடிய அன்றொரு நாள் திடுக்கிட்டு நின்றேன் காலம் மென்பச்சையில் தெரிந்தது.
வாகனத்தில் தொங்கும் பூமாலையைப் பற்றி இழுக்கிறது மாடு சிதறும் இலைகளை கன்று மேய்கிறது உருண்டோடும் எலுமிச்சையை வாகனத்தின் அடியில் பதுங்கிய நாய் விரட்டி விரட்டிச் செல்கிறது
பருவ காலங்கள் மாறுகையில் காலத்தின் கரங்களிலிருந்து கடும் கபில நிறத் துரு பூட்டின் வழியே சங்கிலியினூடு உதிர்கிறது
ஹெல்மெற்றுக்குள் இருக்கும் நண்பனுக்கு பல சௌகரியங்கள் முகம் தெரியாது என நினைத்துக் கடந்துவிடலாம்