திருமணமான மூன்றாவது நாளே ஜெகந்நாதன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று வினோபாவின் பாத யாத்திரையில் இணைந்துகொண்டார். கிருஷ்ணம்மாள் சென்னைக்கு வந்து ஆசிரியை பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.
கோவில் சன்னிதியில் நின்றுகொண்டு, பக்தர்கள் தெய்வத்தை சேவிக்கும்போது நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த பக்த கோடிகளின் முகங்களைப் பார்வையிட்டேன். அத்தனை முகங்களிலும் ஏதோ இனமறியாத சோகம் கவ்விக் கொண்டிருந்தது. ஏன் என்று விளங்கவில்லை,
‘அக்கினிப் பிரவேசம்’ முதல் வாசிப்பில் புரியாதப் புதிர்கள் அவிழத் தொடங்கின. பாலியல் வன்முறையை ரொமாண்டைஸ் செய்யும் கதைசொல்லி, ‘சேடிஸ்ட்’ ஆண் உளவியலை, கதைக்குள் ஆணின் ‘இயல்பான விளையாட்டு குணமாக’ நிறுவுகிறார்.
சில்வியாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘கொலாசஸ்’ 1960இல் வெளிவந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் சில்வியாவிடம் இருந்த விரக்தியையும் வெறுப்பு மனப்பாங்கையும் வன்முறை உணர்ச்சிகளையும் மரணத்தைக் கொண்டாடும் மனநிலையையும் எதிரொலித்தன.
ஸ்கூட்டர் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஓடத்தொடங்கின. ஆரம்பகாலத்தில் தென்பட்ட அந்த வாகனாதி ‘ஃபண்டாபுலஸ்’ வகை வண்டியொன்றில் வந்து இறங்கிய பென்னிஸை சிலர் வயிற்றெரிச்சலோடு கவனித்தனர்.