நாரணோ ஜெயராமன், எழுபதுகளில் புதுக்கவிதையின் இளம்பிராயத்திலேயே தனித்தன்மை வாய்ந்த குறுங்கவிதைகளை எழுதிக் கவனம்பெற்றவர்.
தெணியானின் தன்வரலாறு வடமராச்சி மக்களின் அரைநூற்றாண்டு வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டுகிறது.
அவர் எழுதிய கட்டுரைகளை விட அவரைப் பற்றிய கட்டுரைகள் அதிகமாக வெளிவந்தது அவர் நட்பைப் பேணிய விதத்துக்குச் சான்றாக இருக்கிறது.
நம் வாழ்க்கையில் நடப்பதற்கு ஓரளவாவது நாம்தான் பொறுப்பு என்ற நம்பிக்கை பிரான்சிஸ் கிருபா போன்றவர்களின் முடிவில் ஆட்டம் காண்கிறது.
பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொந்தரவு என்பது, வெவ்வேறு ரூபங்களில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தி அலைக்கழித்து, பணியை நிம்மதியாக செய்யவிடாது
ஐயா ஓர் இரவு தனிமையில் இறந்துபோனார். நாங்கள் எல்லோரும் கொக்குவிலில் கூடினோம். 31ஆம் நாள் காரியங்கள் முடிந்த பின்னர் ஐயாவின் பெட்டகத்தை திறந்து ஆராய்ந்தபோது சாதகக் கட்டுகளை காணவில்லை. வேறு பொருட்களும் மறைந்துவிட்டன. ஆக மிஞ்சியது கணக்குப் புத்தகம்தான். நான் அதை எடுத்துக்கொண்டேன்.