எம் பெண்களின் / இன்பக் கதைகளானது / இத்தனை விரைவாக / முடிவது எதனால் / தயக்கத்துடன் வருகிறது / ஒற்றை வார்த்தையில் / ஒரு பதில்
Tags : முயங்கொலிக் குறிப்புகள்
தாளிடப்பட்ட தனியறைக்குள் உருவற்ற நறுமணமாய்ப் பரவுகிற நினைவுகளால் மூச்சு முட்டியதில் வெளியேறிவிடத் தவிக்கிறது ஒரு காதல்.
மணிக்கு இவ்வளவு எனப் பொருள் / ஈட்டுபவளால் எச்சரித்துவிடமுடிகிறது / தனங்களின் மேடையில் கைகள் / அபிநயிக்கத் தொடங்கும் / முதல் நொடியிலேயே.
கட்டிலில் / திரும்பிப் படுத்துக்கொள்ளுதல் / என்பது / எனக்கு எதிராக / எப்போதும் / நீ கைக்கொள்ளும் தந்திரம். / என் / இறைஞ்சுதல்களால் / துளைக்கவே முடியாத கேடயம் அப்போதுன் இதயம்.
உக்கிரமான பதிலுடன் / பலகாலமாகக் காத்திருக்கிறேன்! / சபிக்கப்பட்ட / அந்தக் கட்டிலில் / சயனிக்குமுன் / நீ / ஒரு முறையாவது / கேட்பாயென.
நினைவுத் தீக்குச்சி உரசலிலேயே / கங்குகள் நெக்குவிடும் தாவரம் என்னுடல்; / சாமத் திரி அமர்த்தி பிறை கீழிறங்கும் வரை / நடக்குமுன் ஊடல்.
இத்தனை வருடங்களில் / அவள் / அவனுக்காக எதுவும் பெரிதாகச் / செய்ததேயில்லை. / / ஒவ்வொரு முறையும் / அவள் உச்சம் எய்துகிற / பாவனை தவிர்த்து.