தொலைப்பேசி அறிமுகமானபோது அழைப்புகளைப் பெறுவதும் பிறருடன் தொடர்புகொள்ளுவதும் டெலிபோன் ஆபரேடர்களின் மூலமாகத்தான். பெண்களே அந்தப் பணியைச் செய்வார்கள்.
என் உலகத்தை, என் அடக்கப்பட்டிருந்த வன் உணர்வை அங்கீகரித்து, அதையும் கவிதை ஏற்கும் என்பதை சொன்னவர் கலாப்ரியா். அதனால், அவர் என்றும் எனக்குள் நிலைத்த நாயகன்.
ஒன்றை, அதன் உள்ளுக்குள்ளே அதன் சதையோடு எலும்புக் கூடுகளையும் பார்த்துவிடும் கூர்ந்த கண்கள் மணிவண்ணனுடையவை.
உலகக் காடுகளைப் பற்றிய ஆவணப் படமொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐநூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிற பிரும்மாண்ட மரங்கள் பலவற்றைக் காண முடிந்தது.
நபக்கோவ், அவரது இளம் பிராயத்திலிருந்தே வண்ணத்துப் பூச்சிகளைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். சுமார் நாலாயிரம் வகையான வண்ணத்துப் பூச்சிகளை அவர் சேகரித்து வைத்திருந்தார்.
பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொந்தரவு என்பது, வெவ்வேறு ரூபங்களில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தி அலைக்கழித்து, பணியை நிம்மதியாக செய்யவிடாது
சரித்திரத்தின் இம்மூன்று பெண்களும் ஆணாதிக்கச் சமூகத்தால் அடிமையாக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண் உடல்கள். ஆகவே, தொடர்ந்து ஆணாதிக்கச் சமூகம் எல்லாப் பெண்களையும் இவ்வகைமைக்குள் அடைக்கத் துடிக்கிறது.
தனது வரலாறு போலவும், அதனுடன் சேர்ந்த நவீன தமிழ் இலக்கிய உலக வரலாறு போலவும் வண்ணநிலவன் எழுதும் கட்டுரைத் தொடர் இது. ‘பின் நகர்ந்த காலம்’ என்ற தலைப்பில் வெளிவந்த புத்தகத்தின் தொடர்ச்சி.
டோரிஸ் லெஸ்ஸிங் உலக மகா யுத்தத்துக்குப் பிந்திய கட்ட எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இருபதாம் நூற்றாண்டின் பிரச்சினைகளைக் கவனித்து அவரது எழுத்து கட்டமைக்கப்பட்டது. அவரது ஆரம்ப கால நாவல்கள் சமூகத்தில் ஆழப் பதிந்திருந்த நிறவெறி அரசியலுக்கு எதிராக எழுந்தவை.
பெண்கள் தங்கள் எதிரிகளின் கூடவே ஒரே கூரையின் கீழ் வாழ்கிறார்கள். இதனைப் பெண்களால் அடையாளம் காண முடியாமல் ஆயிரமாயிரமாண்டுகளாகத் திணிக்கப்பட்ட ஆணாதிக்க சார்பு கருத்தியலால், ஆணாதிக்கயேற்பு அடிமை உளவியலால் பெண்களின் மூளைகள் நஞ்சூட்டப்பட்டிருக்கின்றன.