இரண்டு நாட்களில் / வெள்ளம் வடிந்து நிலமும் காய்ந்து - அதில் / சில புற்களும் முளைத்து விட்டதாக / நாங்களே கூறிக்கொண்டோம்
தாளிடப்பட்ட தனியறைக்குள் உருவற்ற நறுமணமாய்ப் பரவுகிற நினைவுகளால் மூச்சு முட்டியதில் வெளியேறிவிடத் தவிக்கிறது ஒரு காதல்.
மழை நின்றுவிட்டது வெளியே போக யாரும் தயாரில்லை அடுத்த முறை பொறாமை கோபம் ஆத்திரம் காமம் எல்லாம் மனதிற்குள் அனுமதிக்கையில் கொஞ்சம் கவனமாக இருங்கள்
மணிக்கு இவ்வளவு எனப் பொருள் / ஈட்டுபவளால் எச்சரித்துவிடமுடிகிறது / தனங்களின் மேடையில் கைகள் / அபிநயிக்கத் தொடங்கும் / முதல் நொடியிலேயே.
இத்தனை பேருக்கு மத்தியிலே / நான் சந்தித்துவிடமேண்டுமெனத் / தேடிக்கொண்டேயிருக்கிறேன் / தூண்டில் வைத்திருக்காத ஒருவனை
கட்டிலில் / திரும்பிப் படுத்துக்கொள்ளுதல் / என்பது / எனக்கு எதிராக / எப்போதும் / நீ கைக்கொள்ளும் தந்திரம். / என் / இறைஞ்சுதல்களால் / துளைக்கவே முடியாத கேடயம் அப்போதுன் இதயம்.
வானுயர்ந்து நின்ற மலையின் உச்சியை / தலைக்குமேல் உயர்த்திக் குவித்த / என் கரங்களால் வணங்கி நிற்கிறேன் / அவற்றின் நிழலோ எதிர் கிடந்த சிறு கல்லை வணங்கிக் கொண்டிருக்கிறது.
வாழ்வெனும் அந்தி வானில் மறைகின்றனர் அடி வானை இருள் சூழ்கிறது அப்போது மௌனம் ஒரு நத்தையாக மாறி ஆயுளின் கரைகளில் ஊர்கிறது
உக்கிரமான பதிலுடன் / பலகாலமாகக் காத்திருக்கிறேன்! / சபிக்கப்பட்ட / அந்தக் கட்டிலில் / சயனிக்குமுன் / நீ / ஒரு முறையாவது / கேட்பாயென.
பக்கத்து வீட்டில் தனியே வசித்த பெரியவரும் இவளும் தினமும் தத்தம் துணைகளை பற்றி குழந்தைகளை பற்றி பகிர்ந்து கொள்வர்