பெண்கள் தங்கள் பாலியல் விருப்பங்களை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்; அவர்கள் வேண்டாம் என்று சொல்வது வேண்டும் என்பதற்கான அழைப்புத்தான் எனும் அபத்தமான கருத்துக்கள் முந்தைய காலகட்டத்துக்குவ் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இது நவீன காலம். எந்த ஒரு பெண்ணும் ‘நோ’ என்று சொல்லிவிட்டால் அதற்கு ‘நோ’ என்பது மட்டும்தான் ஒரே அர்த்தமாக இருக்க முடியும்.
தனது வரலாறு போலவும், அதனுடன் சேர்ந்த நவீன தமிழ் இலக்கிய உலக வரலாறு போலவும் வண்ணநிலவன் எழுதும் கட்டுரைத் தொடர் இது. ‘பின் நகர்ந்த காலம்’ என்ற தலைப்பில் வெளிவந்த புத்தகத்தின் தொடர்ச்சி.
நான் என் புத்தகங்களை வாய் விட்டு வாசிக்கிறேன். என் எழுத்துக்களை நானே என் குரலில் கேட்பதை மிகவும் விரும்புகிறேன். இதனால் என் வார்த்தைகள் எப்படி ஒலிக்க வேண்டும் என்று நான் அளவிட முடிகிறது.
ஐயா ஓர் இரவு தனிமையில் இறந்துபோனார். நாங்கள் எல்லோரும் கொக்குவிலில் கூடினோம். 31ஆம் நாள் காரியங்கள் முடிந்த பின்னர் ஐயாவின் பெட்டகத்தை திறந்து ஆராய்ந்தபோது சாதகக் கட்டுகளை காணவில்லை. வேறு பொருட்களும் மறைந்துவிட்டன. ஆக மிஞ்சியது கணக்குப் புத்தகம்தான். நான் அதை எடுத்துக்கொண்டேன்.
உலகம் முழுக்க நகைச்சுவை கலைஞர்களுக்கு ஆதர்சமாகத் திகழும் சார்லி சாப்ளின், 1966ஆம் ஆண்டில் தனது திரைப்படங்கள் பற்றியும், நாடோடி தோற்றத்தின் உருவாக்கம் குறித்தும் திரைப்பட ஆர்வலர் ரிச்சர்ட் மேரிமேனுக்கு அளித்த நேர்காணல் இது.
சில்வியா பிளாத் கவிதை மொழிபெயர்ப்பு; தமிழில்: ஸிந்துஜா
அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவல் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசுகிறார் திலகவதி ஐபிஎஸ்.
