ஜான்.எஸ். பேர்ட்டால் உருவாக்கப்பட்டிருக்கும் Stan and Ollie திரைப்படம் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான லாரல், ஹார்டியின் இறுதி தினங்களை பதிவு செய்திருக்கிறது. புதிய இளம் கலைஞர்கள் பலர் கண்டெடுக்கப்பட்டு, ஹாலிவுட் திரைத்துறையை ஆக்கிரமித்திருந்த காலமொன்றில் லாரல், ஹார்டியின் நிலை எவ்வாறிருந்தது என்பதை இத்திரைப்படம் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
வாகனத்தில் தொங்கும் பூமாலையைப் பற்றி இழுக்கிறது மாடு சிதறும் இலைகளை கன்று மேய்கிறது உருண்டோடும் எலுமிச்சையை வாகனத்தின் அடியில் பதுங்கிய நாய் விரட்டி விரட்டிச் செல்கிறது
பழங்குடி வாழ்வு முறையில் வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்னமேயே நெருங்கி பழகுவார்கள். ஊர் மன்றில் உள்ள மந்தை என்னும் மந்தில்தான் இரவுகளில் இருவரும் தங்குவர். மந்தை என்பது பொது நிகழ்வுகளுக்கு முடிவெடுக்க அனவரும் கூடும் பொது இல்லம். ஆணும் பெண்ணும் இந்த இல்லத்தில் தங்கி பழகி மூன்று மாதத்தில் கருவுற்றால்தான் இருவருக்கும் ஊர் பெரியவர்களால் திருமணம் நடத்தி வைக்கப்படும்.
அந்த அனுபவம் தீர்க்கமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்தது: கீழே இறங்குவதென்பது மேலே போவதை விடக் கடினமானது. இதிலிருந்து பொதுமைப்படுத்தினால், விளைவுகள் காரணங்களை மிஞ்சக்கூடியவை; அத்துடன் மட்டுப்படுத்துவதும்கூட. இந்த முறைப்பாட்டின்படி சில சந்தர்ப்பங்களில் ஒரு பூனை கொல்லப்படுகிறது; பிற சந்தர்ப்பங்களில் ஒரு மனித உயிர்.
“நீ நீயாகவே இருக்காதே; உடனிருப்பவனையும் நேசி” என சூடு வைக்காமல். துப்பாக்கியால் சுடாமல் நம்முள் பெரும் காயத்தை ஏற்படுத்தி செல்கிறார் பாக்கியம் சங்கர், இந்த தன் ‘நான்காம் சுவர்’ தொகுப்பில்.
பெண்களின் நிலையைச் சிறப்பாகப் படைத்துக் காட்டிய தென்னிந்திய நாவல்களாக ஒ. சந்துமேனன் (1847–1899) எழுதிய ‘இந்துலேகா’ (மலையாளம்/1889), குலவாடி வெங்கடராவ் (1844–1913) எழுதிய ‘இந்திராபாய் அல்லது சட்தர்ம விஜயவு’ (கன்னடம்/1899), அ. மாதவையாவின் ‘முத்துமீனாட்சி’ (ஒரு பிராமணப்பெண் சுவ சரிதை) (1904) ஆகிய மூன்றையும்தான் விமர்சகர்கள் முன்மொழிகிறார்கள். இவற்றில் இந்திய அளவில் சிறப்பு வாய்ந்ததாக ‘முத்துமீனாட்சி’ விளங்குகிறது.
‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாசிக்களால் யூதர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் திரைவடிவம். அதிகாரம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் குரூரம் மிக்கவனாக மாற்றி விடுகிறது என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார், டாம்.
ஒருநாள் போர்க்களத்தில் செத்துப் போயிருந்த சிங்கள இராணுவப் படைச் சிப்பாயினது உயிரற்ற உடலை நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிப்பாயின் முகம் எனது உடன்பிறவா சகோதரனொருவனை நினைவுபடுத்தியது. அவனும் நானும் சிறுவயதில் ஒன்றாக விளையாடப் பழகியிருந்தோம்.
திருத்தவோ தள்ளி உள்ளே விடவோ நேரமில்லை, சுகந்தனின் காரை விட்டுவிட்டு போவதாக முடிவெடுத்தோம். இப்போது எனது காரைத் தெருவுக்கு எடுக்க, சுகந்தனின் ஹோண்டாவைப் பார்த்து அது இளக்காரமாகச் சிரித்தது
நாம் பிளவுண்ட ஒரு கலாச்சாரத்தில் இருக்கிறோம். நாம் நிச்சயமானவை என்று நம்புபவை மீதும் கேள்விகள் எழுப்பப்பட்டு விட்டன. இளைஞர்களும் யுவதிகளும் இவ்வளவு வருஷக் கல்விக்குப் பின்னரும் உலகைப் பற்றிய தெளிவான பார்வையும் ஞானமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
