டோரிஸ் லெஸ்ஸிங்: சமரசங்களை மறுத்து எழுந்த வியக்தி

டோரிஸ் லெஸ்ஸிங் உலக மகா யுத்தத்துக்குப் பிந்திய கட்ட எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். இருபதாம் நூற்றாண்டின் பிரச்சினைகளைக் கவனித்து அவரது எழுத்து கட்டமைக்கப்பட்டது. அவரது ஆரம்ப கால நாவல்கள் சமூகத்தில் ஆழப் பதிந்திருந்த நிறவெறி அரசியலுக்கு எதிராக எழுந்தவை.

ஜல்லிக்கட்டு: காண்டாமிருகமாகும் எருமை

யூஜின் அயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’ நாடகம். இனவாதத்தையும் அரசதிகாரத்தையும் எள்ளலுடன் விமரிசிக்கும். அதைப் போலவே ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் சமகால இந்திய வாழ்க்கையில் பரவிவரும் கும்பல் மனோபாவத்தையும் செயல்பாடுகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.

லிங்கம்: ஆன்மீகமா ஆயுதமா

பெண்கள் தங்கள் எதிரிகளின் கூடவே ஒரே கூரையின் கீழ் வாழ்கிறார்கள். இதனைப் பெண்களால் அடையாளம் காண முடியாமல் ஆயிரமாயிரமாண்டுகளாகத் திணிக்கப்பட்ட ஆணாதிக்க சார்பு கருத்தியலால், ஆணாதிக்கயேற்பு அடிமை உளவியலால் பெண்களின் மூளைகள் நஞ்சூட்டப்பட்டிருக்கின்றன.

எஸ்.பொ.வின் ‘சடங்கு’

‘சடங்கு’ வெளிவந்து இன்று 50 வருடங்களான பின்னும், மீள வாசித்து புதுப்புதுப் பக்கங்களை கண்டுபிடிக்கக் கூடியதாக இருப்பதுதான் வியப்பளிப்பது. அது அதனுள் பல நுண்ணிய பக்கங்களை ஒளித்துவைத்திருப்பதால்தான் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது இருக்கின்றது.

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்: எல்லாம் செயல்கூடும்

திருமணமான மூன்றாவது நாளே ஜெகந்நாதன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று வினோபாவின் பாத யாத்திரையில் இணைந்துகொண்டார். கிருஷ்ணம்மாள் சென்னைக்கு வந்து ஆசிரியை பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.

பிரீத்லெஸ்: சினிமாவில் நிகழ்ந்த ஓர் அற்புதம்!

அறுபது ஆண்டுகளைக் கடக்கும் பிரெஞ்சு திரையுலகின் புதிய அலையில் நிகழ்ந்த ஒரு அற்புதம், ‘பிரீத்லெஸ்’ திரைப்படம். இதன் கதையை எழுதியவர் பிரெஞ்சின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ. இதன் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் கிளாட் சாப்ரோல். இயக்கியவர், ழான் லுக் கோடார்ட்.

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்!

சீண்டுவார் யாரும் அற்ற எளிய மனிதர்களின் கதைகள், உதயசங்கரின் கதைகள். புனைவின் யுக்தி என்று எதற்கும் உதயசங்கர் மெனக்கெடவில்லை. பதாகையாக இக்கதைகளைத் தாங்கிப் பிடிக்கும் முன்னுரை, என்னுரைகூட இதில் இல்லை.

1962 டைரிக் குறிப்பிலிருந்து…

கோவில் சன்னிதியில் நின்றுகொண்டு, பக்தர்கள் தெய்வத்தை சேவிக்கும்போது நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த பக்த கோடிகளின் முகங்களைப் பார்வையிட்டேன். அத்தனை முகங்களிலும் ஏதோ இனமறியாத சோகம் கவ்விக் கொண்டிருந்தது. ஏன் என்று விளங்கவில்லை,

அக்கினிப் பிரவேசம்: ரேப்பிஸ்ட் இந்திரன்களை காதல் உன்மத்தர்களாய் உயர்த்தும்

‘அக்கினிப் பிரவேசம்’ முதல் வாசிப்பில் புரியாதப் புதிர்கள் அவிழத் தொடங்கின. பாலியல் வன்முறையை ரொமாண்டைஸ் செய்யும் கதைசொல்லி, ‘சேடிஸ்ட்’ ஆண் உளவியலை, கதைக்குள் ஆணின் ‘இயல்பான விளையாட்டு குணமாக’ நிறுவுகிறார்.

கலை என்பது ஒரு வகையிலான பிரார்த்தனை!

ரஷ்ய திரைப்பட மேதை ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி, திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய வழிமுறைகளை தோற்றுவித்தவர். 'கலை செயல்பாடு என்பதே ஒருவகையிலான பிரார்த்தனைதான்’ என்பதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கை இருந்தது.