ஜேவியர் மரியாஸ் நேர்காணல்

 ஜேவியர் மரியாஸ் நேர்காணல்

ஆணுக்கும் பெண்ணுக்கும்

நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும்

மனதளவில் இருவரும் ஒன்றுதான்!

 

தமிழில்: ஜெகநாத் நடராஜன்

 

ஜேவியர் மரியாஸ் பரவலாக அறியப்பட்ட சமகால ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர். ஜேவியர், தன் மிகச் சிறிய வயதிலேயே புனைகதைகளை எழுத ஆரம்பித்து விட்டார். ‘The Life and Death of Marcelino Iturriaga’, ‘While The Women Are Sleeping’ ஆகியவை அவரது 14ஆவது வயதில் எழுதப்பட்டது. அதன் பிறகு மாட்ரிட் கம்ப்ளூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது தாமஸ் பிரவுண், லாரன்ஸ் ஸ்டெர்ன், வாலஸ் ஸ்டீவன்ஸ் உள்ளிட்ட பலரது படைப்புகளை மொழியாக்கம் செய்தார். கட்டுப்பாடுகளற்ற, ஆன்மீகமயமான இத்தகையோர் எழுத்துக்களின் சாயல்கள் பின்னாட்களில் எழுதப்பட்ட ‘Your Face Tomorrow’ என்ற மூன்று பாகங்கள் கொண்ட ஜேவியர் மரியாஸின் சிறந்த படைப்புக்குப் பின்புலமாக இருந்தன. ‘புருஸ்டியன்’ (Proustian) எனப்படும் கடந்த காலமும் நிகழ்காலமும் இணைந்து சிதையும் ஒற்றன் வகை நாவலான இது, 1000 பக்கங்களில் இறுக்கமான சொல்லாடல்களைக் கொண்டது.

புனைவின் சாத்தியமற்ற தன்மைகளைச் சாத்தியமாகவும், உண்மைக்கும் வரலாற்றிற்கும் நிகழ்காலத்திற்கும் உரிய தொடர்புகளை முன்னிறுத்துவதிலும், மொழிபெயர்ப்பின் சாத்தியமின்மையைத் தாண்டியதுமான கூறுகள் ஜேவியர் படைப்புகளை நிரவியிருந்தன. ஹாவியேரின் ‘All Souls’ ஸ்பானீஷ் இலக்கியத்தின் போக்குகள் குறித்த நாவலாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றிருக்கிறது. 80களில் இரண்டு ஆண்டுகள் அவர் மொழிபெயர்ப்பு பற்றி பயிற்றுவிக்கவும் செய்திருக்கிறார்.

இது ‘The White Review’ தளத்திற்கு ஜேவியர் மரியாஸ் அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு…

அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் கழிந்த உங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?

நான் அமெரிக்காவில் இரண்டு காலகட்டங்களில் இருந்திருக்கிறேன். முதல் காலகட்டத்தைக் கணக்கிலெடுக்க முடியாது. நான் மாட்ரீட்டில் 1951ஆம் ஆண்டு பிறந்தேன். அப்போது என் அப்பாவை அமெரிக்கக் கல்லூரி ஒன்று வேலைக்கு அழைத்தது. என் அப்பா பேராசிரியராகவோ எழுத்தாளராகவோ இருந்திருக்க வேண்டியவர். ஆனால், அவர் இவை இரண்டிலும் ஒன்றாக இல்லை; இருக்கவும் அனுமதிக்கப்படவில்லை. தற்செயலாக நான் பிறந்த அன்று அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர் எப்போதும் சொல்வதைப் போல நான் பிறந்தேன்; என்னை அவர் தன் கரங்களில் ஏந்திக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். நான் பிறந்த பதட்டத்தில் அவர் இல்லை. சூழ்நிலை அப்படியாக இருந்தது.

அதன் பிறகு நானும் என் மூத்த சகோதரரும் என் அம்மாவும் மாஸாஸெட் நகருக்குச் சென்றோம். அந்த வருடம் முழுவதும் அங்கு படித்தோம். நான்கைந்து வருடங்களுக்குப் பின் என் தந்தை யேல் பலகலைக் கழகத்திற்கு வேலைக்கு அழைக்கப்பட்டார். 1955-56ஆம் வருடம் முழுவதும் நியூகனெக்டிகட்டில் இருந்தோம். அதன் பின் எனது குழந்தைப் பருவம் முழுவதும் மாட்ரிட்டில்தான்.

ஆனாலும், அமெரிக்க ஆழ்நினைவுகள் உள்ளுக்குள் கிளர்ந்துகொண்டே இருந்தது. குழந்தையாக அல்லது மிகச் சிறிய வயதில் நீங்கள் வெளிநாடு ஒன்றிற்குச் செல்வதைக் கற்பனை செய்து பாருங்கள். உண்மையில் அது ஒரு கண்டுபிடித்தல்தான். நானும் என் சகோதரரும் அங்கு வாழ்ந்த வருடங்களை எண்ணுவோம். அதைத் தவற விடுவதை உணர்வோம். எப்போது அமெரிக்கா செல்லப் போகிறோம் என்று கேட்போம். உண்மையில் அங்கு சிறப்பான சில விஷயங்கள் இருந்தன. அவை ஸ்பெயினில் இல்லை.

மற்றபடி வழக்கமான ஸ்பானிய குழந்தைப் பருவம்தான். கடைசி வருடம் வழக்கமான ஒன்றாக இல்லை. நாங்கள் வளர்ந்த தலைமுறை அப்படி. குறிப்பாக நான் ஆண் – பெண் இருபாலரும் ஒன்றாகப் படிக்கும் பள்ளியில் படித்தேன். ஸ்பெயினில் அந்தக் காலத்தில் அது வழக்கமான நடைமுறை இல்லை. என் சம வயதுடைய பலர் ஒரு பாலர் படிக்கும் பள்ளியில் படித்தார்கள். பெரும்பாலான பள்ளிகள் கன்னியாஸ்திரீகளாலும் பாதிரியார்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன. அதிர்ஷ்டவசமாக நான் அங்கெல்லாம் பயிலாமல் சுதந்திரமான பள்ளியில் படித்தேன். அரசாங்க அலுவலர்கள் வரும்போது மட்டும் ஆசிரியர்கள் பரபரப்பாவார்கள். “ஓடுங்கள், பிரிந்து செல்லுங்கள்” என்பார்கள். ஆண் குழந்தைகள் அந்தப் பக்கமும் பெண் குழந்தைகள் இந்தப் பக்கமுமாக ஓடுவோம். அதிகாரிகள் நாங்கள் தனித்தனியே படிப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

அதோடு ஒரு வினோதமான பழக்கம் ஸ்பெயினில் உண்டு. கால்பந்தாட்ட நடுவர்கள் எப்போதும் இரண்டு முன் பெயருடன் இருப்பார்கள். இரண்டு பெயரிலும் அவர்கள் அழைக்கப்படுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். உங்களுக்கு கார்சியா, கோன்சலஸ், ரோட்ரிக்ஸ் போன்ற பெயர்கள் இருந்தால் இரண்டு பெயர்களில் அழைக்கப்படுவீர்கள்; ஆனால், மரியாஸ் என்ற பெயர் இருந்தால் இரண்டு பெயர்களில் அழைப்பது அபத்தமானது. ஆனால், நடுவர்கள் இரண்டு பெயர்களையும் பயன்படுத்தினார்கள். இது 1960இலிருந்து நடைமுறையிலிருப்பதை அறிந்தேன். ‘பிரைமரா லிகா’வில் பிராங்கோ என்ற நடுவர் இருந்தார். அவர் பிராங்கோ மார்டினெஸ் என்று அழைக்கப்பட்டார். ஏனெனில், பிராங்கோ போட்டியை முடித்துவிட்டார். அணியின் ஆதரவாளர்கள் பிராங்கோ மீது கோபமாக இருக்கிறார்கள் என்று செய்தி வருவதைத் தவிர்க்கவே இந்த முறையாம். என்ன அபத்தம்?

‘Dominions Of The Wolf’ என்ற உங்கள் நாவலில் அமெரிக்க திரைத்துறைக்கு மனம் திறந்த புகழுரை என்று சொல்லியிருக்கிறீர்கள்.

‘Dominions Of The Wolf’ நாவலை நான் தெளிவற்ற மனநிலையிலும் பொறுப்பற்ற சூழலிலும் எழுதினேன். அதேபோல இன்னும் சிலவற்றையும் என் 12-13 வயதில் எழுதினேன். நான் விரும்பியவற்றை நிறைய படிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். நான் என்னை மிஞ்சுவதற்குச் செய்த பிரயத்தனமே அதுவன்றி வேறொன்றுமில்லை. இந்த வார்த்தை இப்போது புழக்கத்தில் இல்லை. புனிதமான வார்த்தை அது. இது போலியாக உருவாக்கப்படுவதோ, ஒன்றைப் போல இன்னொன்றைச் செய்வதோ அல்லது இலக்கிய திருட்டோ அல்ல. அற்புதமானது. நீங்கள் விரும்பும் ஒன்றைப் போல இன்னொன்றை உருவாக்கிக் கொள்ளும் பரவசம். எனக்கு வில்லியம் பிரவுண் நாவல்களையும் மஸ்கடியர் நாவல்களையும் மிகவும் பிடிக்கும். அவற்றை வாசிக்கும் போது அவை போல இன்னும் எனக்கு வேண்டும் என்று கேட்பேன்.

‘Dominions Of The Wolf’ நாவல் இத்தகைய ஆசைகளால் உருவாக்கப்பட்டது. பிரசுரம் செய்ய அல்ல. என் நண்பர்களிடம் கொடுத்து என்ன செய்திருக்கிறேன் பாருங்கள் என்று சிலாகிக்க மட்டுமே எழுதினேன். அது பிரசுரமாகி அதன் விமர்சனங்கள் வந்தபோது எனக்கு 19 வயது. எனக்கு இன்னும் சில விமர்சனங்கள் ஞாபகத்தில் இருக்கின்றன. சில விமர்சகர்கள் சொன்னார்கள், இந்த நாவல் கருணை மிக்கதாக இருக்கிறது என்று. நான் சொல்வேன், இதில் நாவலுக்கான யுக்திகள் இருக்கின்றன. நாவல் தன்மை, கற்பனையுலகத் தன்மை, வேகம் எல்லாம் இருக்கிறது. கூடுதலாக அல்லது குறைவாக இது விமர்சிக்கப்பட்டாலும், ஏன் இந்த ஆள் தன் உலகம் பற்றிப் பேசாமல் ஏன் இதனைப் பற்றிப் பேசுகிறான் என்ற வகையிலான கேள்விகள் நிரம்பியிருக்கின்றன. 1971 சமூக எதார்த்த நாவல்களின் காலம்.

எல்லா எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகள் பிராங்கோவின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக தங்கள் படைப்புகள் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இது பெரிதும் முட்டாள்தனமானது. உண்மையில் நாவல்களால் எதையும் செய்ய முடியும். அவர்கள் மிக மோசமான சுவாரஸ்யமற்ற நாவல்களை எழுதினார்கள். அர்த்தமுள்ளவையாக அவை இருக்கலாம். ஆனால், இலக்கியப் பார்வையில் அது அப்படி அல்ல. என் தலைமுறை எழுத்தாளர்கள் அதனைச் செய்ய மாட்டார்கள். நான் எப்போதுமே ஒரு குடிமகனாக இருப்பதற்கும் எழுத்தாளனாக இருப்பதற்குமான வேறுபாட்டை உணர்ந்தே வந்திருக்கிறேன். நான் விமர்சகர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகும்போது அவர்கள் இந்த வகையில் தவறாக இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். நான் அந்தவகையில்தான் குழந்தைப் பருவ ஸ்பெயினைப் பற்றி நினைக்கும்போதும் அமெரிக்க திரைத்துறையைப் பற்றி, நாவல்கள் பற்றி, டிடெக்டிவ் நாவல்கள் பற்றி நினைப்பேன்.

டாஷியல் ஹாமெட், ஃபிட்ஸ்ஜெரால்ட், ரேமண்ட் சண்ட்லர் – இவர்களெல்லாம் துன்பம்மிக்க இவ்வுலகிலிருந்து நமக்கு விடுப்பு தருகிறார்கள். அதன் மூலம்தான் என்னை நசுக்கும் துயரங்களிலிருந்து நான் தப்பிக்க முடிந்தது. இதைப் போல ‘Dominions Of The Wolf’ ஒரு முரணான நாவல். நகைச்சுவை. நான் எந்தவழியில் என் சொந்த குழந்தைப் பருவ மனநிலையிலிருந்து விடுபட்டேனோ அதை எழுதியதாகப் பின்னர் நினைத்தேன். ஆனால், என் கடமையைச் செய்யாததாக விமர்சகர்கள் குறிப்பிட்டார்கள். ஒருவித உந்துதலுடன் என்னை மீறவே நான் பிரயத்தனப்பட்டேன்.

ஸ்பானிய மொழியின் போதாமை மற்றும் மொழிபெயர்ப்பு போலவே எழுதுகிறீர்கள் என்று பொதுவாக உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறதே?

பல வருடங்களாக நான் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறேன். என் இரண்டாவது நாவலிலுள்ள பிரிட்டானிய கதாபாத்திரங்கள் வடதுருவ, தென் துருவத்தில் வேலைபார்ப்பவர்கள் போலத் தெரிகிறார்கள். 1973இல் என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் அது வெளியானது. என் முதல் இரண்டு நாவல்கள் ஸ்பானிய வாழ்வு பற்றியதோ, ஸ்பானிய மக்களைப் பற்றியதோ, ஸ்பானிய அரசியலைப் பற்றியதோ இல்லை. அதனாலேயே சிலர் ஒரு ஆங்கில எழுத்தாளர் ஸ்பானிய மொழியில் எழுதுகிறார் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஸ்பானிய மொழியின் தாத்பரியங்களோடு என் வார்த்தைகள் இல்லை என்றும் சொன்னார்கள். அது உண்மைதான். நான் என் நடையில் அர்த்த விஸ்தரிப்புமிக்க தன்மையைப் பயன்படுத்துகிறேன். அது என் ஆங்கில அறிவு காரணமாக மட்டும் இல்லை. அதனாலேயே எனக்கு வெளிநாட்டு எழுத்தாளன் என்ற முத்திரை.

இது ஒரு தரக்குறைவான செயல். என் வாழ்நாளில் நான் இதுபோன்ற பல முத்திரைகளை ஒட்டப்பட்டு வந்திருக்கிறேன். கடைசியாக நல்ல எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்ளப் பட்டேன். ஆனால், அதீத மூளைக்காரன் அல்லது மூளைக் குறைபாடுள்ளவன், இறுக்கமாக எழுதுபவன். என் கதைகள் அப்படியல்ல. உணர்ச்சிவயமாகவோ கவிதை நயமாகவோதான் இருக்கும் என்று நான் சொல்வேன்.

கொஞ்சம் கழித்து நான் பெண்களுக்காக எழுதுபவன் என்றார்கள். அதுவும் மோசமான குற்றச்சாட

Amrutha

Related post