இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினை மக்கள் தொகை அதிகரிப்புதான். இந்நிலையில், மேலும் அதிகரிக்கச் சொல்வது சரியான ஆலோசனையாக இருக்காது.
பெரியாரை புகழ்ந்து டி.எம். கிருஷ்ணா பாடுவதை எதிர்க்கும் ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், மோடியை புகழ்ந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற, இளையான்குடி சாலைக்கிராம பள்ளி வாசல் திறப்பு விழா, மனநெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
நீர் மாசு, காற்று மாசு போன்று ஒரு சூழலியல் பிரச்சினையாகக் கருதும் அளவிற்கு நாம் ஒலி மாசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இனிமேல் இப்படி இருக்க முடியாது.
இந்திய ஜனநாயகத்தின் இறுதி பாதுகாப்பு அரசியலமைப்பின் அடிப்படை கட்டுமானம். அது உடைக்கப்பட்டால் அப்புறம் நாம் எழுந்திருக்கவே முடியாது.
மணிப்பூரில் பழங்குடியினர் மட்டுமல்ல பெரும்பான்மையினரான மெய்தேய்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலத்தவர்களுக்கும் மணிப்பூர் ஒரு பாடம்.
தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், கழிவு நீர்த் தொட்டிகளில் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையில் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மனிதன் வாழ்வதற்காகத்தான் உழைக்க வேண்டுமேயன்றி உழைப்பதற்காக வாழக்கூடாது.
ஐ.நா. பொதுச் செயலாளர், “மனித குலத்தின் உயிர் நாடியான நீர், மாசினாலும் காலநிலை மாற்றத்தினாலும் தூர்ந்துபோய் வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர, தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய திட்டம்.