இராசேந்திர சோழன் கதைகள், அவர் பெண்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதை மட்டுமல்ல, காமத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது!
சிபில் இன்னும் சாகமுடியாமல் பல சிரமங்களுக்கு ஆளாகிக் கிடக்கிறாள் என்றுதான் ரோமாபுரி மக்கள் நம்புகிறார்கள். இன்றும் அவளைப் பற்றிப் பேசத்தான் செய்கிறோம்.
சிலப்பதிகாரத்தில் சேர செங்குட்டுவன், வட நாட்டு மன்னர்களை ‘வட ஆரியர்’ என்று குறிப்பிடும்போது, ‘சம்ஸ்கிருதச் சார்பு கொண்ட மொழிகள் பேசும் வட நாட்டு மன்னர்கள்’ என்று தான் குறிப்பிடுகிறான்.
பாரதி தம் பதினெட்டாம் வயதில் எழுதிய ‘கனவு’ (சுயசரிதை) அவருடைய இளமைப் பருவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
தக்கிண மகாராஷ்டிராவும் திராவிட மொழிகளுக்கும் வேர் வழி ஒற்றுமைகள் இருந்திருக்க வேண்டும். மராத்திக்கும் தமிழுக்கும் பொதுவான சொற்கள் பல் உள்ளன.
சிலப்பதிகார இசை, நாடகச் சொற்கள் பல பொருள் விளங்காமைக்குக் காரணம், அவை சம்ஸ்கிருத மரபுக்கு முந்தியதாக இருக்கக்கூடும்.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு ஏற்பியல் உள்ளது. பெரிய பத்திரிகைகளின் ஏற்பியல் ஒத்து வராததால் சிறுபத்திரிகைகள் வந்தன.
சங்க காலப் புலவர்களுக்கிருந்த நகைச்சுவை உணர்வு இலக்கண ஆசிரியர்களுக்கும் அவற்றுக்கு உரை கண்ட உரையாசிரியர்களுக்கும் இல்லை.
இந்தியாவின் ஒருமைப்பாட்டினைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலத்தையும் மத்திய ஆட்சிமொழி ஆக்கும் வாய்ப்பினை சீர்துக்கிப் பார்த்தல் நன்று.
'உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்' என்பது தேவகுமாரனின் வார்த்தை. அதை இமையத்தின் எழுத்துகளில் காணலாம்.