பாரதி தம் பதினெட்டாம் வயதில் எழுதிய ‘கனவு’ (சுயசரிதை) அவருடைய இளமைப் பருவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
முகாமை விட்டு வெளியே வந்தால் ஒரு ‘தலைமறைவு’ வாழ்க்கையைத்தான் எந்த ஈழத்து அகதியும் இந்தியாவுக்குள் வாழ வேண்டியிருக்கின்றது.
தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், கழிவு நீர்த் தொட்டிகளில் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையில் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மனிதன் வாழ்வதற்காகத்தான் உழைக்க வேண்டுமேயன்றி உழைப்பதற்காக வாழக்கூடாது.
நீங்கள் அடிபணிவதற்காகவும் பயப்படுவதற்காகவும் உரத்த கோஷங்களை மந்திரங்களாக நினைத்துக் கூவி கூவிப் பொய்த் தெய்வங்களை உருவாக்கிக் கொண்டீர்கள்.
பெல்லிசேரி, இந்தியச் சமயங்கள் முன்வைக்கும் சமயம் சார்ந்த தத்துவ விசாரணையின் ஓரடுக்கை விவாதிக்க முயன்றுள்ளார். பார்க்க வேண்டிய படம்.
நினைவுத் தீக்குச்சி உரசலிலேயே / கங்குகள் நெக்குவிடும் தாவரம் என்னுடல்; / சாமத் திரி அமர்த்தி பிறை கீழிறங்கும் வரை / நடக்குமுன் ஊடல்.
“அவளை அவர்கள் சுட்டார்கள். அவர்களால் தான் எங்களூரில் விபச்சாரம் குறைந்தது என்று இப்போதும் நம்பப்படுகின்றது.”
புராண, பக்தி இலக்கியங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்த திரையுலகு திராவிட இயக்கத்தால் சமூகக் கதைகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியது.
பிரசன்ன விதானகேயின் ‘காடி’ (Gaadi) திரைப்படம் கண்டிய கடைசி (தமிழ்) மன்னனான சிறி விக்கிரம ராஜசிங்க(ம்)த்தின் காலத்தில் (1814-1815) நிகழ்கிறது.
