இரண்டு நாட்களில் / வெள்ளம் வடிந்து நிலமும் காய்ந்து - அதில் / சில புற்களும் முளைத்து விட்டதாக / நாங்களே கூறிக்கொண்டோம்
Tags : கவிதை
மழை நின்றுவிட்டது வெளியே போக யாரும் தயாரில்லை அடுத்த முறை பொறாமை கோபம் ஆத்திரம் காமம் எல்லாம் மனதிற்குள் அனுமதிக்கையில் கொஞ்சம் கவனமாக இருங்கள்
இத்தனை பேருக்கு மத்தியிலே / நான் சந்தித்துவிடமேண்டுமெனத் / தேடிக்கொண்டேயிருக்கிறேன் / தூண்டில் வைத்திருக்காத ஒருவனை
வானுயர்ந்து நின்ற மலையின் உச்சியை / தலைக்குமேல் உயர்த்திக் குவித்த / என் கரங்களால் வணங்கி நிற்கிறேன் / அவற்றின் நிழலோ எதிர் கிடந்த சிறு கல்லை வணங்கிக் கொண்டிருக்கிறது.
வாழ்வெனும் அந்தி வானில் மறைகின்றனர் அடி வானை இருள் சூழ்கிறது அப்போது மௌனம் ஒரு நத்தையாக மாறி ஆயுளின் கரைகளில் ஊர்கிறது
பக்கத்து வீட்டில் தனியே வசித்த பெரியவரும் இவளும் தினமும் தத்தம் துணைகளை பற்றி குழந்தைகளை பற்றி பகிர்ந்து கொள்வர்
சினிமாக் கதாநாயகர்கள் / வில்லன்களை / ஒற்றைக்கையால் தூக்கிச் / சுவற்றில் நிறுத்துவதைப் பார்த்த / மகள் தன்னிடம் இருக்கும் / பொம்மைகளை எல்லாம் / அவ்வாறே மேல் தூக்கி முறைக்கிறாள்
காதருகில் வைத்தால் மட்டுமே கடல் ஒலிக்கும் சங்கு உனது அன்பு. புறக்கணிப்பின் நகக் கணுக்களால் எவ்வளவு குத்தியும் அழிந்திடாத மச்சம் என் பரிவு.
ஓவியம்: ரேவதி நந்தனா 1. கல் வெட்டாங் குழி வெயில் மின்ன பாசி படர்ந்து மாணிக்க படிகமாய் ஓர் கல் வெட்டாங் குழி. ஒரு காலத்தில் துவைக்க குளிக்கவென ஊருக்கு அது ஒரு வரம். மஞ்சள் புடவையில் அவள் விழுந்து மிதந்த இரவுக்கு பிறகு யாதம் புழங்காமல் கருநீலம் படியவாயிற்று இப்போது. பாறை இடுக்கில் முளைத்த மஞ்சணத்தி மர கிளையொன்று அந்தக் குழியில் தாழ, பாறைக்கும் கிளைக்கும் இடையே நீர் மேல் வலை பின்னி காத்திருக்கிறது ஒரு […]
எல்லாம் சரி காடென்பது பசுமையா மரங்களா மலர்களா கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் அல்ல வனம் அது காலம் காலமாய் தொடரும் முடிவிலி காதல்