அமைதியாக இருக்கும்படி தனக்குத்தானே எச்சரித்துக் கொண்டு அவன் படுத்தான். மாலை வெளிச்சம் மங்கத் தொடங்கிய போது, அவனுக்கு நடுக்கம் ஏற்பட்டது.
“நீ நிக்கன்னு நினைச்சுக்கிட்டு கூப்புட்டேன். அவ வந்து நிக்கா. நா, அம்மணக்கட்டையா நிக்கேன். நீ எங்க போயித்தொலஞ்சன்னு கோபப்படுதாஹ. என்னத்த சொல்ல.”
மனிதர்கள் எல்லோரும் இனவாதிகளே. நிறவாதிகளே. அழகான பெண்ணை விரும்பியவர்கள் எல்லாம் யார்? அவர்கள், நிறத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லையா?
இந்த இந்திரா காந்தி... காங்கிரஸ் கட்சி. யார் இவர்கள்? ஏன் எங்கள் நாட்டுக்குள் மூக்கை நுழைக்க வேண்டும்? காலம் யாவற்றுக்கும் பதில் கூறியது.
கானல் நீராய் ஓடிய தார்ச்சாலையில், நிழலைத் தேடிய அவளின் பாதம்.தூரத்திலிருந்து அவளாக இருக்குமோவென பின் தொடர்ந்தேன். அவளது குதிகால்களில் வெடிப்பு.
“நீங்கதானே இந்தக் கதையை எழுதியவர்? இந்தக் கதையை எழுதினதுக்கு ஒண்ணு நீங்க மன்னிப்பு கேக்கணும், இல்லாட்டி, ஜெயிலுக்குப் போகணும்.”
இரவு மொட்டை மாடியில் அவன் கேட்ட முத்தத்தைத் தருவதாக அவள் ஒப்புக்கொண்டாள். ஆனால், அந்த நேரத்தைத் தொடுவதற்கு நெருங்கும்போது சுழலில் திமிறினாள்.
அவள் சட்டையையும் டிரவுசரையும் கழற்றித் தூக்கியெறிந்தாள். வாழ்க்கை மிகமிக கட்டுப்பாடுகள் உடையது; தனக்காக வாழாமல் யாருக்காகவோ தான் வாழ்வதாக நினைத்தாள்!
இறுதியில் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டிருந்த காலம். மே 17 காலை... ஒரு பஜீரோ உறுமலோடு வந்து நின்றது. அவனேதான்... ஒரு அதிசயம் போல அது நிகழ்ந்தது.
அன்றைக்குத்தான் அவன் என்னையக் ‘கீர்த்தன்யா’ என்று பெயர்சொல்லி அழைத்தது. எனக்குள்ளே ஒரு மின்சாரம் பாய்ந்த மாதிரி... பிறகெல்லாம் தூக்கம் வராத இரவுகள்தான்.