பெண்கள் தங்கள் பாலியல் விருப்பங்களை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்; அவர்கள் வேண்டாம் என்று சொல்வது வேண்டும் என்பதற்கான அழைப்புத்தான் எனும் அபத்தமான கருத்துக்கள் முந்தைய காலகட்டத்துக்குவ் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இது நவீன காலம். எந்த ஒரு பெண்ணும் ‘நோ’ என்று சொல்லிவிட்டால் அதற்கு ‘நோ’ என்பது மட்டும்தான் ஒரே அர்த்தமாக இருக்க முடியும்.
உலகம் முழுக்க நகைச்சுவை கலைஞர்களுக்கு ஆதர்சமாகத் திகழும் சார்லி சாப்ளின், 1966ஆம் ஆண்டில் தனது திரைப்படங்கள் பற்றியும், நாடோடி தோற்றத்தின் உருவாக்கம் குறித்தும் திரைப்பட ஆர்வலர் ரிச்சர்ட் மேரிமேனுக்கு அளித்த நேர்காணல் இது.
ஜான்.எஸ். பேர்ட்டால் உருவாக்கப்பட்டிருக்கும் Stan and Ollie திரைப்படம் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான லாரல், ஹார்டியின் இறுதி தினங்களை பதிவு செய்திருக்கிறது. புதிய இளம் கலைஞர்கள் பலர் கண்டெடுக்கப்பட்டு, ஹாலிவுட் திரைத்துறையை ஆக்கிரமித்திருந்த காலமொன்றில் லாரல், ஹார்டியின் நிலை எவ்வாறிருந்தது என்பதை இத்திரைப்படம் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
‘தி ஹியூமன் ஃசெண்டிபெட்’ இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாசிக்களால் யூதர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் திரைவடிவம். அதிகாரம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் குரூரம் மிக்கவனாக மாற்றி விடுகிறது என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார், டாம்.
யூஜின் அயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’ நாடகம். இனவாதத்தையும் அரசதிகாரத்தையும் எள்ளலுடன் விமரிசிக்கும். அதைப் போலவே ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் சமகால இந்திய வாழ்க்கையில் பரவிவரும் கும்பல் மனோபாவத்தையும் செயல்பாடுகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.
அறுபது ஆண்டுகளைக் கடக்கும் பிரெஞ்சு திரையுலகின் புதிய அலையில் நிகழ்ந்த ஒரு அற்புதம், ‘பிரீத்லெஸ்’ திரைப்படம். இதன் கதையை எழுதியவர் பிரெஞ்சின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ. இதன் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் கிளாட் சாப்ரோல். இயக்கியவர், ழான் லுக் கோடார்ட்.
ரஷ்ய திரைப்பட மேதை ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி, திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய வழிமுறைகளை தோற்றுவித்தவர். 'கலை செயல்பாடு என்பதே ஒருவகையிலான பிரார்த்தனைதான்’ என்பதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கை இருந்தது.