இன்றைய நவீன நாடகத்தின் முன்னெடுப்பு எப்படி இருக்கலாம், என்னென்ன புதிய திசைகளில் பயணிக்கலாம் என்ற நோக்கில் இந்த தொகுப்பு உருவாகியிருக்கிறது.
மீரா இன்றைய தலைமுறையின் படைப்பாளி. மீராவின் நாவல்கள் குறைந்த பக்கங்கள், ஆனால், அவ்வளவு தெளிவான கதைக் களங்கள்.
தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய இவ்வழக்குச் சொல்லகராதி தனிக்கவனம் பெறுவதற்கு உரியது.
முகாமை விட்டு வெளியே வந்தால் ஒரு ‘தலைமறைவு’ வாழ்க்கையைத்தான் எந்த ஈழத்து அகதியும் இந்தியாவுக்குள் வாழ வேண்டியிருக்கின்றது.
எந்தப் பிரச்சினையானாலும் நேரடியாக எடுத்துப் பரப்பி வைத்து அலசுவதில் துணிச்சலை கொண்டுள்ள பிரமிளா பிரதீபன் விடிவெள்ளியாகத் தெரிகின்றார்.
வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம்.
இளங்கோ மிகவும் ஆழமான ஒரு சமூகப் பார்வை கொண்ட இளைஞர். இந் நூலில் தனது விரிவான சமூகப் பார்வையினூடாக பயணிக்கின்றார்.
ந. பெரியசாமி கவிதைகளில் கோலோச்சியவர். இக் கட்டுரை நூலில் மேலும் தம்மின் படைப்பாதிகாரத்தை வலுவாக்கியுள்ளார்.
குழந்தை தன் தாயிடம் ஒரு கேள்வி கேட்கிறது. பிறகு தான் எடுத்திருக்கும் ஒரு முடிவை உருக்கமான குரலில் தெரிவிக்கிறது. படித்தபோது மனம் கரைந்துவிட்டது.
வஸ்கொடகாமாவின் இந்தியாவை நோக்கிய கடற்பயணம் உட்பட ஏராளம் தகவல்கள் இந்நூலில் காணலாம். விவரிப்புகளைப் படிக்கும்போது எஸ்.ரா. புனைகதைகளை போன்ற சுவாரசியம்.