புனைக்கதைகளோ திரைக்கதையோ இல்லாமல் செயல்படும்போதுதான் என்னால் சிறந்த முறையில் செயல்பட முடிகிறது.
இத்தனை ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இந்த அமைப்பு முறையின் இறுக்கம் சற்றே தளர்ச்சியுறத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இது பெரும்பாறையைச் சிறு உளியால் உடைக்கத் தொடங்கியிருக்கும் தொடக்கச் செயல்பாடு மட்டுமே.
லியோ என்னை ஆழ்ந்து பார்த்துவிட்டு, “வருத்தமடைய வேண்டாம், நான் அந்த எர்னெஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும்?” என்றார்.
என் வாழ்க்கையில் நான் அறிந்த மிகப் புத்திசாலித்தனமான மனிதருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது.
இருட்டில்தான் ஒருவர் வெளிச்சத்தைக் காண்கிறார். அது போலவே நாம் துக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் போது இந்த ஒளிதான் நமக்கு அருகாமையில் ஆதரவாக இருக்கிறது.
1956இல் கொர்த்தஸாரால் எழுதப்பட்ட இக்கதையின் பின்னால் இருக்கும் உயிரியல் மற்றும் சூழலியல் உணர்வு ஆச்சரியம் அளிக்கிறது.
உருவாக்கப்பட்ட, பொய்களும் கற்பனைகளும் கட்டுக் கதைகளும், ஒழுக்க சீலங்களும் புனிதங்களும், ‘தன்னை அறிந்து உணர்தல்’ ஏற்படும் போது விட்டு விலகிச் சென்றுவிடும்.
ஜேவியர் மரியாஸ் பரவலாக அறியப்பட்ட சமகால ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர். ‘The White Review’ தளத்திற்கு ஜேவியர் மரியாஸ் அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது.
மலையாள கவிஞர் கே. சச்சிதானந்தன் விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், நாடக ஆசிரியர் என்ற பன்முகம் கொண்டவர். ‘காட்மாண்டு ட்ரியுபூன்’ பத்திரிகைக்கு கே. சச்சிதானந்தன் அளித்த நேர்காணல் இது…
அவள் சட்டையையும் டிரவுசரையும் கழற்றித் தூக்கியெறிந்தாள். வாழ்க்கை மிகமிக கட்டுப்பாடுகள் உடையது; தனக்காக வாழாமல் யாருக்காகவோ தான் வாழ்வதாக நினைத்தாள்!